siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 3 ஏப்ரல், 2013

மாலியின் போர்ப் பயிற்சிக்கு உதவும் சுவிஸ் ,.,


ஐரோப்பிய ஒன்றியம், மாலி ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க சுவிஸ் ராணுவத்தின் உதவியை நாடியபொழுது சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் கலந்தாலோசித்து பின்னர் உதவுவதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் புர்கால்டெர்(Burkhalter) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மாலியின் தலைநகரான பமாகோஷில் முகாமிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய ராணுவப்பயிற்சியில் சுவிஸ் வீரர்களும் இனி கலந்து கொண்டு மாலி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச மனிதநேயச் சட்டத்தை மதிக்கும் சுவிஸ் வீரர்கள் இந்தப் பயிற்சியின்பொழுது துப்பாக்கி எடுத்துச் செல்லமாட்டார்கள். மற்றும் ராணுவ ஆயுத பயிற்சி அளிக்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து ஐநூறு வீரர்கள் மாலிக்கு வரவேண்டும் என்று இந்தக்குழு எதிர்ப்பார்க்கின்றது

0 comments:

கருத்துரையிடுக