இந்தியாவில் தொடரும் பாலியல் புகார்களால் வெளி நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பெண் சுற்றுலா பயணிகளின் வருகை மிக கடுமையாக வீழ்ச்சி அடைத்துள்ளது.
அண்மை காலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து கொலை, தனது கணவருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சுவிஸ் பெண் கற்பழிப்பு, ஆக்ராவில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த வெளிநாட்டு பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சித்தது என்று தொடர்ந்து பெண்களுக்கு எதிரான செய்திகள் தினம் தினம் இந்திய ஊடகத்தில் இடம் பிடிக்க தொடங்கின.
எனவே பிரிட்டன், பிரான்ஸ், சுவிஸ், அவுஸ்திரேலியா போன்ற மிகப் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு அதுவும் குறிப்பாக இளம் பெண்கள் இந்தியா செல்வதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தி வருகின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெளிநாட்டினர் பலர் தங்கள் இந்திய பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்டு இருந்த விடுதிகள் மற்றும் சுற்றுலா முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.
இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் இந்திய வருகை சுமார் 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
0 comments:
கருத்துரையிடுக