ஜேர்மனியில் விரைவில் வசந்த காலம் தொடங்கவுள்ள நிலையில் மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம்.
இது குறித்து மருத்துவமனையின் காது மூக்குத் தொண்டை மருத்துவர் பேராசியர் ஆண்டிரீயாஸ் டீஸ்(Andreas Dietz) கூறுகையில், வசந்த காலங்களில் மரங்களில் பூக்கும் மலர்களின் மகரந்ததால் ஒவ்வாமை ஏற்பட்டு தூசிக் காய்ச்சல் பரவும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது மரங்களில் இலைகளோ, மலர்களோ பூக்கவில்லை. ஆனால் இன்றிருக்கும் குளிர் நாளை மாறி வெப்பம் பரவத் தொடங்கியதும் மலர்கள் மலரும்.
அப்பொழுது மகரந்தம் காற்றில் பரவும் வேளையில் ஒவ்வாமை தாக்கும் மனிதர்கள் தங்கள் கைகளில் கைக்குட்டையை வைத்துக் கொண்டு மூக்கை காத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
முதன் முதலில் மலரும் birch மலரில் இருந்து பரவும் மகரந்தத்தால் பாதிக்கப்படுவோரை மருத்துவமனைகள் விரைவில் எதிர்பார்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வடஅமெரிக்காவில் இருந்து ஜேர்மனிக்கு வந்திருக்கும் Ragweed என்ற செடியின் மலர்களால் பரவும் மகரந்தம் வீரியம் மிக்கவை. இதனாலும் ஒவ்வாமை ஏற்பட்டு காய்ச்சல் வரும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்
0 comments:
கருத்துரையிடுக