siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 4 ஏப்ரல், 2013

முதியவர் ஆபாச நடவடிக்கை: நீதிபதி எச்சரிக்கை



சுவிட்சர்லாந்திலுள்ள ஜுரா மாநிலத்தைச் சேர்ந்த வயதான விவசாயி(80) ஒருவர், சிறுவர் சிறுமிகளிடம் தொடர்ந்து தவறாக நடந்துகொண்டார் என்பதால் இவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இவர் பிறர் முன்னிலையில் மிகச்சிறிய கால்சட்டையை அணிந்துகொண்டு தனது உறுப்பு பலரது பார்வையில் படும்படி ஆபாசமாக நடந்துசெல்வது, சிறுவர்களிடம் பாலியல் முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற குற்றங்களுக்காக பொலிசார் இவரை போரெண்ட்டூயி(Porrentruy) நீதிமன்றத்தில் நிறுத்தியபொழுது நீதிபதி இவருக்கு 720 ஃபிராங்க் அபராதம் விதித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெரிய கால்சட்டை அணிய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டிலும், அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னரும் இந்த எண்பது வயது முதியவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

கருத்துரையிடுக