வட இங்கிலாந்தில் உள்ள நியூ கேஸ்டில் நகரில் உள்ள மேயர் இல்லத்தில் அந்நகரின் தொல்பொருட்கள் மற்றும் அரிய வகை பரிசுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்த இல்லத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நள்ளிரவில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் 1 1/2 லட்சம் பவுண்ட்கள் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.
திருடப்பட்ட பொருட்களில் உலகின் மிக உயரிய பரிசு என கருதப்படும் நோபல் பரிசு பதக்கமும் ஒன்றாகும். ஆயுதப் போட்டியை உலகநாடுகள் கைவிட வேண்டும் என்று சேவையாற்றிய இங்கிலாந்து நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஆர்தர் ஹெண்டர்சனுக்கு 1934ம் ஆண்டு அமைதிக்கான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர் நியூ கேஸ்டில் நகரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மறைவிற்கு பிறகும் இந்த பரிசு பதக்கம் நகர மேயரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதையும் திருடர்கள் கொண்டு சென்றுவிட்டது உள்ளூர் மக்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பெருமைக்குரிய நோபல் பதக்கத்தை எடுத்தவர்கள், உடனடியாக அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என நியூ கேஸ்டல் நகர்வாசி ஒருவர் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக