siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 4 ஏப்ரல், 2013

இறைச்சி உணவில் ஆர்வம் குறைந்த சுவிஸ்

 ஆய்வறிக்கை தகவல் ,,
சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டில் இறைச்சி உணவு குறித்து புரோவியான்டி(Proviande) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஒவ்வொருவருக்கும் தலா 3.4 சதவீதம் இறைச்சி உண்பதில் ஆர்வம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் ஒவ்வொருவரும் சராசரியாக 51.72 கிலோகிராம் இறைச்சி உணவை சாப்பிட்டுள்ளனர். அதாவது ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 141 கிராம் சாப்பிட்டதாகச் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இறைச்சி உணவு குறைந்ததற்குப் பொருளாதாரம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மக்களில் பலர் வெளி உணவகங்களில் இறைச்சி உண்பதைக் குறைத்துவிட்டனர்.
இருந்தாலும் சுவிட்சர்லாந்தில் இறைச்சியின் தரமும், சுவையும் மக்களைக் கவர்ந்திருப்பது உண்மை தான். ஏனெனில் அண்டை நாடுகளான ஜேர்மனி, பிரான்சில் இருந்து இறக்குமதியாகும் இறைச்சியை விட சுவிட்சர்லாந்தில் கிடைக்கும் இறைச்சியே சிறந்தது என்று 64 சதவீதம் பேர் இந்த ஆய்வில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம், சராசரியாக ஒருவர் பன்றி இறைச்சியை 23.54 கிலோவும், கோழிக்கறி 11.31 கிலோவும், மாட்டிறைச்சி 11.06 கிலோவும் சாப்பிட்டதாக இந்த ஆய்வறிக்கை புள்ளிவிபரத்துடன் விளக்குகிறது
 

0 comments:

கருத்துரையிடுக