மியான்மரில் தென்மேற்கு பகுதியின் நேபிடோவ் என்னுமிடத்தில் நேற்றிரவு 5.7 அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.
பூமிக்கடியே 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்கான பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை.
இப்பகுதியின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும், சாகெய்ங் பிளவு செல்கிறது.
இப்பகுதியில் 1930-ம் ஆண்டிலிருந்து 6 முறை கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஏற்பட்ட பூகம்பத்திற்கு 20 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக