சிரியாவில் ஆட்சி மாற்றம் வேண்டி அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக போராளிகள் கடந்த 2 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த சண்டையில் இதுவரை அங்கு 75000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜோர்டான் எல்லைப்பகுதியில் உம் அல் மயாதென் ராணுவ முகாமில் இருந்த அதிபர் ஆசாத்தின் படையினருடன் போராளிகள் கடந்த ஒரு வாரகாலமாக தீவிர சண்டையிட்டனர்.
அதன் பிறகு அவர்களை விரட்டியடித்து, பின்னர் அப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக போராளிகள் அறிவித்துள்ளனர்.
இந்த சண்டையில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய முழுவிவரங்கள் கிடைக்கவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன
0 comments:
கருத்துரையிடுக