siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

ராஜபக்சே எச்சரிக்கை !

சர்வதேச நாடுகள் இலங்கையில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கக் கூடாதாம் : ராஜபக்சே எச்சரிக்கை !
கொழும்பு: சர்வதேச நாடுகள் இலங்கையில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கக்கூடாது என இலங்கை அதிபர் ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளாராமில ! கொழும்பில் நடைபெற்ற இலங்கை சுதந்திரா கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், இலங்கை மக்கள் வதந்திகளுக்குப் பலியாகாமல் நாட்டின் அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் இறுதிப்போர் நடந்தபோது இலங்கைக்கு பல்வேறு நாடுகள் நெருக்கடி கொடுத்ததாக தெரிவித்த அவர், தற்போது வடக்கு மற்றும் தெற்குப் பகுதி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் உள்நாட்டு அமைதியை சீர் குலைக்கும் வகையில் அரசியல் கட்சிகளோ, தனி நபர்களோ செயல்படக் கூடாது என்றும் ராஜபக்சே எச்சரித்தார்.
ஐ.நா தீர்மானத்தை சில நாட்களில் செயல்படுத்தாவிட்டால் நடவடிக்கை என்று அமேரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில் ராஜபக்சே இந்த மிரட்டலை விடுத்துள்ளார். நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியாவும் வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ் நாடு சட்டமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணத்தை மத்திய அரசு ஏற்றுக்கொளவில்லை என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக