siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பிரான்ஸ் படைகள் நடத்திய பயங்கர???

 

ஆப்பிரிக்காவின் மேற்கே அமைந்துள்ள மாலி நாட்டில் கடந்த 2012ம் ஆண்டு முதல் அரசுக்கெதிராக போராளிகள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.
இதில் மாலி அரசுக்கு ஆதரவாக பிரான்ஸ் அரசு, தமது படை வீரர்களை அனுப்பியது. எனவே இப்படைகள் மாலி அரசு இராணுவத்துடன் இணைந்து போராளிகள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி ஒடுக்கியது.
ஆனால் பதுங்கியுள்ள போராளிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பிரான்ஸ் அரசு தனது 4000 படை வீரர்களின் 1000 படை வீரர்களை நிரந்தரமாக மாலியில் நிறுத்தவும், மீதி இருக்கும் 3000 படை வீரர்களை இம்மாத இறுதிக்குள் திரும்பப்பெறவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 1000 ராணுவ வீரர்கள் கொண்ட பிரான்ஸ் படை 'ஆபரேஷன் கஸ்டாவ்' என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலை, மாலியின் கோவா நகரத்தில் நடத்தியது.
பிரான்ஸ் ராணுவம் இதுவரை நடத்திய தாக்குதல்களிலேயே மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இதில் அதிக அளவில் டாங்கிகள், ஹெலிகொப்டர்கள், போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்லாமிய குழுக்களின் கோட்டையாக கருதப்படும் மலைகள் சூழ்ந்த பகுதிகளில் பிரான்ஸ் படைகள் இந்த தாக்குதல் நடத்தி போராளிகளின் 340 பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும், மேலும் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் மூடிவிட்டதாகவும் பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.
இதில் போராளிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த தகவலை நேற்று பிரான்ஸ் அரசு வெளியிட்டது

0 comments:

கருத்துரையிடுக