siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

போர்: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சுவிஸ்.,.



வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையே தற்பொழுது போர் மூளும் சூழ்நிலையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசும் இடமாக சுவிட்சர்லாந்தது அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.
வடகொரியா அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் சுவிட்சர்லாந்தில் நடத்தலாம் என்று வெளியுறுவுத்துறையின் தகவல் தொடர்பாளி, சுவிஸ் நியுஸ் ஏஜென்சிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா தனது மூன்றாவது அணு ஆயுத சோதனையை நடத்தியதால் ஐ.நா அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இதனால் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா தென்கொரியாவில் படைவீரர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்ததின் பெயரில் போருக்கான அறை கூவல் வடகொரியாவிடமிருந்து வந்ததுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு வடகொரியா சென்று வந்த சுவிஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் மிச்சலீன் கேமி ரே(Micheline Calmy-Rey) ஊடகத்திற்கு அளித்துபேட்டியில், அந்நாடு வெடிபொருள் கிடங்காகத் திகழ்கிறது என்றும் ஒரு தீப்பொறி விழந்தால் போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தமது தாயகம் திரும்பலாம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வடகொரியா போருக்குத் தயாராகி வருவதை உணர்த்துகிறது.
இதனால் வடகொரியாவில் இருக்கும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை தாயகம் திரும்ப தேவையான ஏற்பாடுகளை சுவிஸ் செய்து கொடுக்கும் என்று சுவிஸ் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் சுவிஸ் வெளியுறுவத்துறை தனது இணையதளத்தில் இருந்து பயணிகள் வடகொரியாவிற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளன

0 comments:

கருத்துரையிடுக