பிரபல எழுத்தாளரும் கட்டுரையாளரும் தேசியவாதிகளால் பாராட்டப்பட்டவருமான Dominique Venner இன்று மாலை 16h00 மணிக்கு Notre-Dame de Paris தேவாலயத்தினுள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேவாலயத்தினுள் உள்ளேயும் வெளியேயும் உல்லாசப் பயணிகள் உட்பட ஆயிரத்து ஐநூறு பேர் உடனடியாகக் காவற்துறையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தேவாலயத்தின் முதற்கட்டுக்கு அருகில் நின்று 78 வயதான இவர் தனது தலையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை தனது வலைப்பதிவில் ' 26 மேயின் ஜெஹய்டெக்கர் போராட்டம்' «La manif du 26 mai et Heidegger» என்ற த
லைப்பில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஓரினத் திருமண அங்கீகாரச் சட்டத்தை 'மிகவும் மோசமானது' என்று விமர்சித்திருந்தார். Taubira சட்டத்தின் எதிர்ப்பாளர்களையே மே 26இல் தேசியப் பேரணிக்காக அழைத்திருந்தார்தற்கொலை செய்து கொண்ட இந்தக் கட்டுரையாளர் «இஸ்லாமிய சக்தி» யைக் கண்டித்து விமர்சித்திருந்தார். ஆபிரிக்க மக்ரெபன் குடியேற்றத்தைக் கடுமையாகக் கண்டித்ததோடு «பிரான்ஸ் இஸ்லாமியர்களின் கைகளில் விழுந்து கொண்டிருக்கின்றது» என்றும் கோபத்தோடு விமர்சித்திருந்தார். «40 ஆண்டுகளாக இதுவரை மற்றும் இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசியற் கட்சிகள் (FN நீங்கலாக), தேவாலயங்கள், முதலாளிகள் போன்றோர் அனைத்து வழிகளிலும் ஆபிரிக்க மக்ரெபன் குடியேற்றத்தை முடக்கி விட்டுக் கொண்டே வருகின்றனர்» என்று தொடர்ந்தும் எச்சரித்து வந்துள்ளார்,
புதன், 22 மே, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக