இங்கிலாந்தும் ஏற்கனவே, இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.
தற்போது சட்டத்திற்குப் புறம்பாகத் தங்குபவர்களை ஒடுக்கும்விதமாக விசா பெறுவதன் விதிமுறைகளை மேலும் கடினமாக்குகின்றது. வரும் நவம்பர் மாதம் முதல், இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல விசா பெறுபவர்கள் காப்புத் தொகையாக அந்த நாட்டு பணத்தின்படி 3,000 பவுண்ட் (2.70லட்சம் ) செலுத்தவேண்டும்.
விசா காலம் முடிந்தபின் குறிப்பிட்ட நபர் இங்கிலாந்தை விட்டு வெளியேறாவிட்டால் காப்புத் தொகை திருப்பித் தரப்படமாட்டாது. இதன் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக அங்கேயே தங்கிவிடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று இங்கிலாந்து கருதுகின்றது.
இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நைஜீரியா மற்றும் கானா ஆகிய ஆறு நாடுகளுக்கு இந்த புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கேயே தங்கிவிடுவதைத் தடுக்கும் வகையிலேயே தங்களுடைய குடியேற்ற அனுமதி முறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும், நாட்டிற்குத் தேவையான, திறமையானவர்களை அவர்கள் நாடு வரவேற்கவே செய்கின்றது என்றும் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் தெரசா மே கூறியுள்ளார்.
கடந்த 2011-12ஆம் ஆண்டில், இங்கிலாந்திற்கு படிப்பதற்காகவோ அல்லது வேலைக்காகவோ செல்லுபவர்கள் விசா பெறுவது 20 சதவிகிதம் குறைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாக, கடந்த ஜூன் மாதத்திற்குப் பின் இங்கிலாந்தில் வந்து தங்கும் அயல்நாட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வருடத்தில் வெறும் 74,000 என்ற எண்ணிக்கையில்தான் இருந்தது
0 comments:
கருத்துரையிடுக