siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 24 ஜூன், 2013

அண்டை நாட்டினரை விட மிகவும் பணம் படைத்தவர்களாக திகழும்


ஜேர்மனியின் அண்டை நாடுகிளில் வசிப்பவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை விட ஜேர்மனி நாட்டின் மையத்தில் வசிப்பவர்களே அதிக பணம் படைத்தவர்களாக திகழ்கின்றனர் என ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மன் பட்ஜ் வங்கி நடத்திய ஆய்வில்(German Bundesbank) ஜேர்மன் மக்களை விட அண்டை நாடுகளில் வசிப்பவர்கள் சராசரி விகிதத்தின் படி அதிக ஏழைகளாக உள்ளனர்.
வீட்டுவருமானம், வங்கியிருப்பு, வயது, வேலை மற்றும் கல்வி, ஆகிய அடிப்படையில் ஜேர்மனியர்கள் மற்றும் ஜேர்மன் அல்லாதவரிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சராசரியாக அண்டைநாடுகளில் வசிப்பவர்களை விட ஜேர்மன் நாட்டினர் 10000யூரோ அதிமம் சம்பாதிக்கின்றனர். அண்டைநாட்டில் வசிப்பவர்களின் சராசரி நபரின் சம்பளம் 34000யூரோ யெனில், ஜேர்மன் நாட்டில் வசிக்கும் சராசரி கீழ்வர்க்க நபரின் சம்பளம் 44000யூரோவாக உயர்ந்து காணப்படுகின்றது.
அதிக வசதிபடைத்தவர்களுடன் ஒப்பிடுகையில் இதன் மதிப்பு இன்னும் அதிக அளவில் வேறுபட்டு காணப்படுகின்றது. அண்டைநாட்டினரின் சம்பளமானது 24000யூரோவாகவும், ஜேர்மன் நாட்டில் வசிப்பவரின் சம்பளமானது 78000யூரோவாகவும் உள்ளது.
அண்டைநாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜேர்மன் நாட்டில் வசிப்பவர்கள் 81 சதவீதம் பேர் சொந்த வீடு மற்றும் வாகனத்துடன் மிகவும் வசதியாக வாழ்வதாக புள்ளியல் விபரங்கள் தெரிவிக்கின்றன.
 

0 comments:

கருத்துரையிடுக