அகதிகளாக இடம்பெயர்வு: ஐ.நா தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும். கடந்த ஆண்டில் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கின்றது.
இடம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம் பெயர்ந்துள்ளனர். இது மிகவும் மோசமான நிலைமை என்றும், சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.
4.5 கோடி அகதிகளில் அரைவாசிப் பேர், ஆப்கானிஸ்தான், சோமாலியா, இராக், சிரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் எனவும், நீண்டகால மோதல்களை தீர்க்க முடியாத அல்லது புதிய மோதல்கள் உருவாவதை தடுக்க முடியாத சர்வதேச சமூகத்தின் இயலாமையையே இந்த புலம் பெயர்வுகள் அதிகரிப்பை காண்பிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறுகிறது
0 comments:
கருத்துரையிடுக