siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 1 ஜூன், 2013

நீர்மூழ்கிக் கப்பல்களை ரோந்துப் பணிக்கு


தென்புறக் கடல்பகுதிகளில் ரோந்து செல்ல அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை ஈடுபடுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
சோவியத் ரஷ்யா சிதைந்து 20 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய அதிகார பலத்திற்கு புத்துயிர் கொடுக்கும் விதமாகவே இத் திட்டத்தை ரஷ்யா அமுல்படுத்தியுள்ளது.
இத்தகவலை, ரஷ்ய நாட்டின் செய்தி நிறுவனம், சனிக்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. மத்தியத் தரைக் கடல் பகுதியில், நிரந்தரமாக ஒரு கப்பற்படையை நிறுவவேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சென்ற மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 16 அணுசக்தி ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் போரெய் நீர்மூழ்கிக் கப்பல்களை ரோந்துப் பணிக்கு அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது.
நீர்மூழ்கி கப்பல்கள் மீண்டும் ரோந்துப்பணியில் ஈடுபடுவது வடதுருவப் பகுதிகளில் மட்டுமல்லாது, தென்பகுதிகளிலும் குற்றங்கள் குறைய உதவும் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகப் பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
இந்த கப்பல்கள் படிப்படியாக கடல் பகுதிகளில் நிலைநிறுத்தப்படும். மொத்தம் 8 போரெய் கப்பல்களில், 2020ஆம் ஆண்டு பணியில் ஈடுபடுத்தப்படும் யூரி டோல்கோருக்கி என்ற கப்பல், இந்த வருடம்தான் கப்பற்படையில் இடம் பெற்றுள்ளது.
கடந்த மே மாதம் மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்து, வலிமையான, செயல்படும் திறனுடைய ராணுவத்தின் தேவையை புதின் வலியுறுத்தி வந்தார்.
13 வருடங்களில், அவர் வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ரஷ்யாவின் ஒற்றுமையையும், வலிமையான ராணுவத்தையும் பற்றிக் குறிப்பிட்டு வந்துள்ளார்.
அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே அணுசக்தி குறித்த மறைமுக மோதல்கள் குறைந்துள்ள நிலையில், 2010ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, நாட்டின் அணு ஆயுதங்களை வரம்புக்குள் வைத்துக் கொள்வதாக தீர்மானித்துக் கொள்ளப்பட்டது.
எனினும் தற்போது புதின் நாட்டின் ஆயுதபலத்தை மேம்படுத்தும் எண்ணத்தில் இருக்கின்றார்
 

0 comments:

கருத்துரையிடுக