காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் லங்கா ஈ நியூஸ் இணைய தளத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கார்ட்டுன் மற்றும் பத்தி எழுத்தாளராக கடமையாற்றிய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ம் ஆண்டில் காணாமல் போயிருந்தார்.
பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வாழ்ந்து வருவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் எக்னெலிகொட வெளிநாடொன்றில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
எக்னெலிகொட பற்றிய தகவல் அதிர்ச்சி அளிக்கின்றத!– சந்தியா எக்னெலிகொட
காணாமல் போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட பற்றிய தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் எக்னெலிகொட பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் உண்மையென்றால் எக்னெலிகொடவை கண்டு பிடிக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் எனவும் அதற்கான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எக்னெலிகொடவை கைது செய்வதற்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், பிரதம நீதியரசரும் எக்னெலிகொட எங்கிருக்கின்றார் என்பது பற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ளதாகவும், அந்தத் தகவல்கள் உண்மையென்றால் அவரை அழைத்து வர சகல அதிகாரங்களும் அரசாங்கத்திற்கு உள்ளதாக சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்
0 comments:
கருத்துரையிடுக