அமெரிக்கா இலங்கை மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று பிரபல சர்வதேச ஆங்கில ஊடகமான சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
சீ.என்.என் இணைத்தளம் நேற்று வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான வன்முறைகள் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் பேரவை வரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயங்களில் இலங்கை இன்னும் பொறுப்புடைமையை காண்பிக்கவில்லை. இந்த நிலையில், சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
எனவே மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்கள் தொடர்பில், இலங்கை மீது இந்த தருணத்திலேயே அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது,
0 comments:
கருத்துரையிடுக