siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 5 ஜூன், 2013

கொழும்பில் பெருமளவு ஆயுதங்கள்!!:

அதிர்ச்சியில் சிறிலங்கா படையினர்,விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடையுள்ள இரண்டு பாரிய குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் கொழும்பு நகரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதுவெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்த ஆயுதங்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது.
 இதையடுத்து பெரும் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய பாரிய குண்டுகளையும், ஆயுதங்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறிலங்கா காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
  போர் நடந்த காலத்தில், கொழும்புக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு தொன் எடையுள்ள குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் தமக்குத் தெரியும் என்று அதனைக் கடத்தி வந்தவரான, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் வெலிக்கடைச் சிறை அதிகாரியிடம் எழுத்துமூலம் தெரிவித்தார்.
  இந்த ஆயுதங்களில் தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள், ஏழு ரி-56 துப்பாக்கிகள், ஒன்பது தன்னியக்க கைத்துப்பாக்கிகள், மூன்று இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ரி-56 துப்பாக்கிகளுக்கான 3500 ரவைகள், 10 மில்லியன் ரூபா பெறுமதியான சொக்கலேற் பொதி, 8 மில்லியன் ரூபா பணம் என்பனவே மறைத்து வைக்கப்பட்டுள்ளன

0 comments:

கருத்துரையிடுக