siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 2 ஜூன், 2013

விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு தங்க நகைகள்


 மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பரிவுக்குட்பட்ட குருக்கள் மடம் எனும் இடத்தில் மட்டக்களப்பபு –கல்முனை குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீரில ஸ்ரீ செல்ல கதிர்காமர் கோயிலில் உள்ள 19 விக்கிரகங்கள் இன தெரியாத நபர்களால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளதோடு தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் எமது செய்தியாளர் ஸ்ரீரில ஸ்ரீ செல்ல கதிர்காமர் கோயில் பூசாரி வெ.கு.நாகராஜ குருக்களை வினவிய போது, நேற்று இரவு 10 மணிக்குப் பிறகுதான் இந்த நாசகார சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் இக் கோயிலில் 19 விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 25 பவுண் தங்கள் களவாடப்பட்டுள்ளதாகவும், கோயில் ஓட்டை கழற்றி தான் கோயிலுக்குள் இனம் தெரியாத நபர்கள் இறங்கி இருப்பதாகவும் இது தொடர்பில் சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயசிங்க தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு இங்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க உடனடியாக மோப்ப நாய்கள், கை விரல் அடையாளம் எடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளும் படி உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் நிலமைகளை கேட்டறிந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேந்திரன்,சி.யோகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஆகியோர் நேரில் சென்று நிலமைகளை கேட்டறிந்து கொண்டதோடு இதன் சூத்திர தாரிகளை உடனடியாக கைது செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்தனர்

0 comments:

கருத்துரையிடுக