ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்து ஒரு தீவிரவாதியின் குடும்பமே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாத கும்பலான தலிபான் இயக்கத்தின் பக்திக்கா மாகாண தளபதியாக இருப்பவன் அப்துல்லா. அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை கொல்லும் நோக்கத்தில் நேற்று முன்தினம் தனது வீட்டில் அப்துல்லா ரகசியமாக வெடி குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தான்.
குண்டுகளை காய வைத்துவிட்டு அப்துல்லா வெளியே சென்றிருந்தபோது அவனது குழந்தைகள் அந்த வெடி குண்டுகளை எடுத்து பந்து போல் உருட்டி விளையாடின. சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனையடுத்து, மற்ற குண்டுகளும் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இந்த விபத்தில் அப்துல்லாவின் வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் அவனது 5 குழந்தைகளும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியான குழந்தைகள் 3 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
கருத்துரையிடுக