siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 20 ஜூலை, 2013

ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைக்கவும்-


 ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தேர்தல் கண்காணிப்பாளர்களை கொண்டுவருமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் உள்ளதால் அவர்கள் கருத்துக்கு கூடிய நம்பகத்தன்மை இருக்கும். இதை நாம் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம் என்று பவ்ரல் அமைப்பின் தலைவர் ஜெஸிமா இஸ்மெயில் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணையாளருடன் நான் தொடர்புகொண்டபோது ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரும் சாத்தியம் இன்னும் உள்ளது என்றும். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்களை அழைப்பதை தான் நிராகரிக்கவில்லையென பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் றோகன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பைச்சேர்ந்த நேபாளம் பங்களாதேஷ் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் 10 பேரை பவ்ரல் அழைக்கவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
'ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு தேர்தல் செயன்முறையில் பங்குபற்றுவதற்கு பிரஜைகளை இணைத்துக்கொள்ளல்' எனும் திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் 88 677 அமெரிக்க டொலர்களை வழங்கும்போதே பவ்ரவ் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு ஜப்பானிய தூதரகத்தில் நேற்று நடைபெற்றது. வட மாகாண சபைத்தேர்தலுக்காக 4500 தேர்தல் கண்காணிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது

0 comments:

கருத்துரையிடுக