இந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டபின், அவை மீண்டும் இயக்கத்திற்கு வந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எத்தியோப்பியன் விமானம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்தது. இந்த விமானம் டிரீம் லைனர் வகையைச் சேர்ந்தது.
பேட்டரி பிரச்சினைக்கு பின்னர் செயல்படும் முதல் வர்த்தக விமானம் இதுவாகும். எனவே தீயை அணைத்த பின்னர், போயிங் நிறுவன அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். ஆரம்பகட்ட ஆய்வில் பேட்டரிகளால் இந்த தீவிபத்து ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்த இடத்தின் அருகில் தீவிபத்து ஏற்படவில்லை என்றும் அவர்களால் கூறப்பட்டது.
இந்த விமானம் லண்டன் விமான நிலையத்திலேயே ஒரு கூடாரத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணைகள்
நடைபெற்று வருகின்றன. விமானத்தின் பின்புறமுள்ள சிக்கலான உடல் பகுதியின் மேல்புறம் அதிக வெப்ப சேதம் ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
விமானத்தின் துணை பேட்டரி பவர் யூனிட் அமைந்துள்ள பகுதி இது என்றபோதிலும், இதுதான் காரணம் என்பதற்கு எந்தவித நேரடி ஆதாரமும் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எத்தியோப்பியன் நிறுவனம் தனது டிரீம் லைனர் விமானங்களைத் தொடர்ந்து இயக்கப்போவதாக அறிவித்துள்ளது. தீப்பிடிப்பதற்கு முன்னால், அந்த விமானம் எட்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த சம்பவத்தினால் விமானப் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று அந்நிறுவனம் கருதுகின்றது
0 comments:
கருத்துரையிடுக