siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 11 அக்டோபர், 2013

செக்ஸ் பொம்மை கடை மீண்டும் திறக்கப்படுமா?


பாரீசில் சட்டங்களை மீறி நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி செக்ஸ் பொம்மை கடையானது மூடப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் நிக்கோலஸ் பன்சல் என்பவர் ஆரம்ப பள்ளியிலிருந்து 90 மீற்றர் தொலைவில் பொம்மைகள் கடை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த கடையில் சட்டங்களை மீறி செக்ஸ் பொம்மைகள் விற்கப்படுவதாகவும், மேலும் பள்ளிக்கு அருகில் செயல்படும் இந்த கடையை மூட வேண்டும் என கிறிஸ்துவ குழு(CLER) புகார் கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இவரது கடை மூடப்பட்டது மட்டுமல்லாமல் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் 30,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிக்கோலஸ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மல்கா கூறுகையில், பள்ளிக்கு அருகில் பொம்மை கடை வைத்திருப்பதை ஒரு குழந்தையோ, பெற்றோர்களோ, ஏன் ஒரு ஆசிரியர் கூட இவர் மீது புகார் கொடுக்கவில்லை.

மேலும் எந்த நீதிமன்றமோ அல்லது வேறு நாடுகளோ பொம்மைகளை ஆபாசமாக பார்ப்பதில்லை, எனவே இந்த கடையினை மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பானது வருகின்ற டிசம்பர் மாதம் 5ம் திகதி வழங்கப்படவுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக