siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

ஆப்கன்- அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் ?


நேட்டோ படைகளைத் திரும்பப் பெறும் ஒப்பந்தம் தொடர்பாக ஆப்கனுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகளை ஒடுக்க, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையைச் சேர்ந்த 87,000 வீரர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படைவீரர்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் திரும்பப் பெறும் எண்ணத்தில் அமெரிக்கா உள்ளது.

அந்த படைகளை வாபஸ் பெறும் ஒப்பந்தத்தில் ஆப்கனுடன், இந்த மாத இறுதிக்குள் ஒப்பந்தம் செய்யவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
நேட்டோ படைவீரர்கள் ஒட்டுமொத்தமாக ஆப்கனை விட்டுச்சென்றால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், ஜான் கெர்ரி ஆகியோர் இடையே 2-ஆவது நாளாக சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

முன்னேற்ற நிலை: இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேற்ற நிலையை அடைந்துவருகிறது. இதில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன' என்றனர்.

0 comments:

கருத்துரையிடுக