மியான்மரில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 62 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு நேற்று பெண்கள்,
குழந்தைகள் உட்பட 70 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று வங்காள விரிகுடா கடலில் சென்றது.
அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றியதாலும், தற்போது மழை காலம் என்பதால் கடுமையான காற்று வீசியதாலும், எதிர்பாராத விதமாக படகு சேதம் அடைந்தது.
இதனால் கடல்நீர் புகுந்ததும், பாரம் தாங்காமல் நடுக்கடலில் கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த குழந்தைகள் உள்பட 70 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர்.
இதில் இன்று காலை குழந்தைகள் உள்பட 8 பேரை மீட்டதாக மியான்மர் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ளவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி பலியாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மியான்மரில் நடைபெறும் வன்முறைகளுக்கு பயந்து கடந்த 18 மாதத்தில் மட்டும் 2.5 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக