எச்.ஐ.வி எனப்படும் உயிர்க்கொல்லி நோயை குணப்படுத்துவதற்காக கனடிய அரசாங்கம் 10.7 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து கனடிய சுகாதாரத் துறை அமைச்சர் றொனா அம்ப்றோஸ் கூறுகையில், எச்.ஐ.வி-யை குணப்படுத்துவதற்காக அரசாங்கம் 10.7 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 5 ஆண்டுத் திட்டங்களுக்கு இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆராய்ச்சி நிலையமானது கிட்டத்தட்ட 8.7 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
71,000 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட 11 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக