வங்காள தேசத்தின் ஐமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல்காதர் மொல்லா. கடந்த 1971ம் ஆண்டு வங்காள தேச விடுதலைக்காக நடந்த போரின்போது இனப்படுகொலைகள் நடந்தன. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இக்குற்றங்களில் ஈடுபட்டதாக மொல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட் மரண தண்டனை விதித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்க்கோரி மனு செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் அவர் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்டதற்கு ஜம்மு காஷ்மீரில் இயங்கி வரும் ஹுரியத் கட்சி தலைவர் சையத் அலி ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், 'பாகிஸ்தான் நாட்டின் மீது அன்புடனும் விசுவாசத்துடனும் நடந்ததற்காக வங்காள தேசத்தில் ஜமாத்.இ-இஸ்லாமி தலைவர்கள் தூக்கிலிட்டு கொல்லப்படுகின்றனர்.
இதை எல்லாம் வெறும் ஊமை பார்வையாளனாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் பாகிஸ்தான் அரசு தனது நன்றிகெட்ட புத்தியை நிலைநாட்டியுள்ளது" என்று கூறியுள்ளார்
0 comments:
கருத்துரையிடுக