siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 5 மார்ச், 2014

திருடர்கள் பற்றி பொலிசார் எச்சரிக்கை

கனடாவின் ரொறன்ரோ பிராந்தியத்தில் திருடர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும், முதியவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவின் ரொறன்ரோ பிராந்திய பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில், திருடர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெரியவர்களின் கவனத்தை திசை திருப்பி அந்நேரத்தில் தங்களது கைவரிசையை காட்டுகின்றார்கள் என்றும், இந்நிலையானது பல்வேறு இடங்களில் இருக்கின்றது எனவும் எச்சரித்துள்ளனர்.
இதுவரையிலும் கிட்டத்தட்ட 12 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன எனத் தெரியவருகின்றது.
இதில் அனேகமான சம்பவங்கள் தனியாக வியாபார தலங்களுக்கு வருகின்ற நபர்களை குறிவைத்தே நடைபெறுகின்றது.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், திருடவரும் நபர்கள், முதலில் தங்கள் மேல் நம்பிக்கை வரும்வகையில் பேசிபழகி பின் திருட்டை அரங்கேற்றுகின்றனர்.
அத்துடன் அவர் கள் தனியாக இல்லாது இருவாராகவோ அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகவோதான் இயங்குகின்றார்கள் எனவும், அவர்கள் முதியவர்களிடம் கொள்ளையிடுவது தமது தொழிலாகக் கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
பல தடவைகளில் போலியான தமது நகைகளைக் காட்டி மக்களிடமுள்ள தங்கத்தைக் களவாடியிருக்கின்றார்கள் எனவும், விரைவில் அவர்களை கைது செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்
 

0 comments:

கருத்துரையிடுக