அவுஸ்திரேலியாவில் படகு மூலம் சென்று அகதி அந்தஸ்த்து கோரி இருந்த இரண்டு இலங்கைத் தமிழர்களுக்கு அந்த நாட்டில் பாதுகாப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசா எதிர்வரும் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவா பாலசுந்தரம் மற்றும் சிவா ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு பேருக்குமே இந்த வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “
இவர்கள் இருவரும் கடந்த 2012ம் ஆண்டு மட்டக்களப்பு நகரில் இருந்து படகின் மூலம் அகதிகளாக அவுஸ்திரேலியா சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் குடியேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக