நைஜீரியாவில் இரட்டைக் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியிலிருந்து குறைந்தபட்சம் 118 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய நைஜீரியாவின் ஜோஸ் நகரிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை மேற்படி இரட்டைக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. மிகவும் பரபரப்பாகவுள்ள சந்தைப் பகுதியில் முதலில் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையொன்றுக்கு அருகில் மற்றைய குண்டு வெடித்தது.
இந்த இரட்டைக் குண்டுவெடிப்புக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை. ஆனால், அண்மைய காலங்களில் போகோ ஹராம் போராளிகள் அங்கு இவ்வாறான குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
கருத்துரையிடுக