siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 22 மே, 2014

முன்னாள் அதிபருக்கு 3 ஆண்டு சிறை


எகிப்தில் கடந்த 1981–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரை 30 ஆண்டு காலம் அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். 2011–ம் ஆண்டு மக்கள் கிளர்ச்சிகளை அடுத்து அவர் பதவி பறிக்கப்பட்டது. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். உடல் நலக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே அரசு நிதி 125 மில்லியன் எகிப்து பவுண்டுகளை திருடிவிட்டதாக முபாரக் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கெய்ரோ கோர்ட்டு நீதிபதி ஒசாமா ஷஹீன், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், முபாரக்கிற்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அவரது மகன்களுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் முபாரக்கிற்கும், அவரது மகன்களுக்கும் நீதிபதி ரூ.17.88 கோடி அபராதமும் விதித்தார். திருடிய அரசு பணம் 125 மில்லியன் எகிப்து பவுண்டுகளை திரும்பத்தரவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

0 comments:

கருத்துரையிடுக