siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 2 மே, 2014

சிறையில் வெடிவிபத்து: 150 கைதிகள் காயம்``

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள சிறையில் வாயுக்கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதில் 150 கைதிகள் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் தொடர்பு அதிகாரி கேத்லீன் கேஸ்ட்ரோ கூறியதாவது:

எஸ்கேம்பியா பகுதியில் உள்ள சிறையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட இந்த விபத்தில், அந்த கட்டடத்தில் இருந்த 600 கைதிகளில் 150 பேர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்குப் பிறகு கைதிகள் அனைவரும் வேறு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று கேத்லீன் கேஸ்ட்ரோ தெரிவித்தார். கடந்த 2 நாள்களாக கனமழை பெய்ததால் சிறை வளாகத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக வாயுக்கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக