siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 15 மே, 2014

இறந்தாலும் பாஸ்போர்ட் மூலம் வாழும் ஜேர்மன் மக்கள்

ஜேர்மனியில் இறந்தவர்களின் பாஸ்போர்ட்டை மற்றவர்களுக்கு விற்பதாக புகார் எழுந்ததை அடுத்து பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜேர்மனி தலைநகரான பெர்லின் இடுகாட்டில் இறந்தவர்களின் பாஸ்போர்ட்டை, கடத்தல்காரர்கள் மூலமாக ஒரே மாதிரி இருக்கும் மற்ற அகதிகளுக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ”ஆபரேசன் ஃப்னரல்”(Operation final)என்ற பெயரில் பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிசார் நியூக்லினில், க்ரொயிட்ஸ்பேர்க் மற்றும் சோனாபேர்க் பகுதியில் உள்ள இடுகாடு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகத்தை சோதனை செய்துள்ளனர்.
தற்போது இந்த வழக்கில் ஒரு பெட்டி முழுவதும் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆனால் இதுவரை இவ்வழக்கில் எவரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 

0 comments:

கருத்துரையிடுக