siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 17 மே, 2014

தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கிய நைஜீரியா !!

நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை கிராம மக்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் தனிநாடு கேட்டு வரும் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் 14ம் திகதி சிபாக் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றினுள் புகுந்த தீவிரவாதிகள், அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த 276 மாணவிகளை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்றனர்.
இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வடகிழக்கு நைஜீரியாவில், கலாபல்ஜ் மாவட்டத்தில் மெனாரி, சான்கயாரி, கராவா ஆகிய 3 கிராமங்களுக்குள் ஆயுதங்களுடன் வீடு புகுந்து மக்களை தாக்க முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தங்களிடமிருந்த அரிவாள், கத்தி, தடி மற்றும் கற்களை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அடித்தும், வெட்டியும் சுமார் 200 தீவிரவாதிகளை கொன்றுள்ளனர்.
மக்கள் துணிந்து களம் இறங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த தீவிரவாதிகள் எஞ்சியவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என தப்பி ஓடி விட்டனர்.
இதற்கிடையே மாணவிகள் கடத்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆறுதல் கூற முடிவு செய்திருந்த நைஜீரியா ஜனாதிபதி குட்லக் ஜோனாதன் பாதுகாப்பு காரணங்களை கருதி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
 

0 comments:

கருத்துரையிடுக