siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 9 ஜூலை, 2014

தொடர் மழை , மண் சரிவு - 73 பேரை காணவில்லை!

சீனாவில் இன்று ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் 73-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இதுவரை 10-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. மீதிவுள்ளவரின் நிலை என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. சீனாவில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மக்களுக்கு போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று, அதிகாலை சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் உள்ள லோங்யாங் மாவட்டத்தில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது.
இதில் 73 க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழிந்துள்ளனர். மண்ணில் புதைந்தவர்களில் 25 பேரை மட்டும் காப்பாற்றியுள்ளனர். மீதமுள்ளவரின் நிலை இதுவரை தெரியவில்லை. மீண்டும் மண் சரிவு ஏற்படும் என்ற பயத்தால், மீதமுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் மீட்பு குழுவினர் தங்க வைத்துள்ளனர். தொடர் மழையால் உலகில் பல இடங்களில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு, அதனால் பலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
மற்றைய செய்திகள்

 

0 comments:

கருத்துரையிடுக