பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டு வழக்கு, நீதிமன்றத்துக்கு போகுமா என்பது குறித்து தகவல் தருவதற்காக ஒரு மாஜிஸ்திரேட்டுக்கு உயர் பதவி பெற்றுத்தருகிறேன் என வாக்குறுதி
அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் இரு தினங்களுக்கு முன்பு அவரது சட்டத்தரணி மற்றும் இரு நீதவான் நீதிமன்ற நீதிபதிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், சர்கோசியை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிஸார் அழைப்பாணை அனுப்பினர். அதன்படி நேற்று அவர் பாரீசில் பொலிஸார் முன்பு ஆஜர் ஆனார். அவரை காவலில் வைத்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
அவரை மேலும் ஒரு நாள் தங்கள் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்தவுனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகளின் பின்னர் அவர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படலாம் அல்லது விடுவிக்கப்படலாம். பிரான்சில் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பொலிஸ் காவலில்
வைக்கப்படுவது இதுவே முதல் முறை. 2017ம் ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக சர்கோசி சமீபத்தில் அறிவித்திருந்தார். இப்போது பொலிஸ் விசாரணையில் அவர் சிக்கி இருப்பது, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அவருடைய முடிவுக்கு விழுந்த அடியாகக் கருதப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக