பிரான்ஸ் நாட்டில் ஹொட்டல்களுக்கு விதிக்கப்படும் வரிகள் 500 சதவிகிதமாக உயர்த்தப்போவது சுற்றுலாப் பயணிகள் மற்றும் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகரம் மற்றும் பிரபல சுற்றுலா தளமான பாரிஸ் நகரத்தில் தற்போது வரி 1 முதல் 1.50 யூரோக்களாக உள்ளது. ஆனால் திட்டமிட்டபடி சட்டம் நிறைவேறினால் வரி 8 யூரோக்கள் வரை உயரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
இது 3 நட்சத்திர விடுதிகளுக்கு 5 யூரோக்கள் வரையும், 4 மற்றும் 5 நட்சத்திர விடுதிகளுக்கு 8 யூரோக்கள் வரை உயரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வருடத்திற்கு 140 மில்லியன் யூரோக்கள் அதிகம் வரும் வருமானத்தை மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துகாக உபயோகப்படுத்த உள்ளது.
மேலும், இந்த சட்டம் விதிக்கப்பட்டால் அரசு மற்றும் வணிகத்துறையினருக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என்றும், இது முற்றிலும் பொறுப்பற்ற செயல் எனவும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மற்றைய செய்திகள்
மற்றைய செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக