siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 14 ஜூலை, 2014

சர்ச்சையில் சிக்கிய பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி  லஞ்ச ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
2007ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற லஞ்ச ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாக நிக்கோலஸ் சர்கோசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் வழக்கு விசாரணையை எதிர்கொண்டார்.
தன்னுடைய அரசியல் மறுபிரவேசத்தைக் குறைத்து மதிப்பிடும் வண்ணம் நீதித்துறையைக் கைக்குள் போட்டுக்கொண்ட அவரது எதிரிகள் தன்னை இப்படியொரு கோரமான பிரச்சினைக்குள் மாட்டிவிட்டதாக சர்கோசி குறை கூறினார். ஆனால் இப்போது அவரது தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியிடப்பட்டு மீண்டும் அவரை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
பிரெஞ்சு பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டிருந்த இந்த உரையாடலில் மொனாகோவில் உள்ள நீதிபதி கில்பர்ட் அசிபர்ட் தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஆறு நிதி ஊழல் வழக்குகளில் ஒன்றில் உதவி புரிந்தால் அதற்குத் தகுந்த வேலை ஒன்று பரிந்துரைக்கப்படும் என்று சர்கோசி தனது நீண்டகால வழக்கறிஞரிடம் தெரிவிப்பதுபோல் உள்ளது.

இந்த நீதிபதியுமே நீண்டகாலமாக நடைபெற்று வந்துள்ள கோடீஸ்வரர்கள் லோரியல் ஹேரஸ், லிலியன் பெட்டென்கோர்ட் நன்கொடை வழக்குகள் குறித்து சட்டவிரோதமாக சர்கோசிக்கு தகவல்கள் தந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் அரசின் சிபாரிசின்பேரில் அளிக்கப்படும் இந்தப் பதவி அந்த நீதிபதிக்கு அளிக்கப்படவில்லை என்றபோதும் இவ்வாறு உதவி புரிவதாகக் கூறுவதே பிரெஞ்சு அரசியல் சட்டத்தின்படி குற்றமாகக் கருதப்படும்.
போலியான பெயரில் வாங்கிய தொலைபேசியில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த உரையாடலை சர்கோசி மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி மொனாகோவின் பிரதமர் மைக்கேல் ரோஜரை சந்தித்தது குறித்தும் கில்பர்ட்டுக்குத் தகவல் தெரிவித்தார் என்றும் சர்கோசி மீது புகார் எழுந்தது. ஆனாலும், தனது தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுகின்றது என்பதை அறிந்திருந்த சர்கோசி இப்படி ஒரு வாய்ப்பை வெளியிட்டிருக்கமாட்டார் என்றும் அந்தத் தகவல் குறிப்பிடுகின்றது.

 
மற்றைய செய்திகள்

0 comments:

கருத்துரையிடுக