புகலிடம் தேடி வந்த அகதிகளிடம் செய்மதித் தொலைபேசிகள் இருந்தமை குறித்து அவுஸ்திரேலியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அண்மையில் அவுஸ்ரேலிய கடற்பரப்பை படகு மூலம் சென்றடைந்த 153 அகதிகளிடம் செய்மதித் தொலைபேசிகள் காணப்பட்டன. இது தொடர்பில் அவுஸ்ரேலிய அரசாங்கம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அகதிகள் சட்டத்தரணிகளுடன் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு சட்டத்தரணிகளின் தொலைபேசி இலக்கங்கள் கிடைக்கப் பெற்றன என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட உள்ளது.
இந்த தொலைபேசி உரையாடல்களை அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர் பதிவு செய்துள்ளனர். அகதிகளின் இந்த பயணம் திட்டமிட்ட அடிப்படையிலான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை என அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. செவ்வாய், 15 ஜூலை, 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக