siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 2 ஆகஸ்ட், 2014

இரக்கமற்ற பெற்றோர்: மரணத்தின் பிடியில் குழந்தை (காணொளி, )

வாடகைத் தாய் மூலம் பெற்ற தமது பிள்ளையை, அவுஸ்திரேலிய தம்பதி ஒன்று தவிக்க விட்டுச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய தம்பதி ஒன்று வாடகைத் தாய் ஒன்றின் மூலம் பிள்ளையை  பெற்றெடுக்க முடிவு செய்தனர். இவர்மூலம் பிறந்த ஆரோக்கியமான பிள்ளையை எடுத்துக் கொண்டு, நோயாளிப் பிள்ளையை விட்டுச் சென்றுள்ளனர்.
தாய்லாந்தைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய பட்டாராமன் சனுபா என்ற பெண்மணியே இந்தப் பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாய்லாந்தில் வறுமையில் வாடும் சனுபாவை,  அவுஸ்திரேலிய தம்பதியினர் தொடர்பு கொண்டு, தமது கருவை சுமக்க முடியுமா என்று கேட்டுள்ளனர். இதற்காக 16,000 டொலர்களை செலுத்தவும் இணங்கியிருக்கிறார்கள்.
இதன் பிரகாரம், அவுஸ்திரேலிய தம்பதியின் கருவைச் சுமந்த சனுபா கடந்த டிசம்பர் மாதம் இரட்டைக் குழந்தைகளை பெற்றிருக்கிறார்.
இந்தக் குழந்தைகளில் பெண் குழந்தை ஆரோக்கியமானதாக இருந்தபோதிலும், ஆண் சிசு டோவ்ன் சின்ட்ரோம் என்ற வளர்ச்சிக் குறைபாட்டு நோயால் பீடிக்கப்பட்டிருந்த விடயம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலிய தம்பதி அதனை சனுபாவிடம் விட்டு, பெண் குழந்தையுடன் சொந்த நாட்டுக்கு சென்றுள்ளனர்.
தமது வயிற்றில் சுமந்த பிள்ளைக்கு கெமி என்று பெயர் சூட்டி கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளும் சனுபாவிற்கு இன்னொரு சோதனை. கெமியின் இருதயத்தில் துவாரம் ஏற்பட்டுள்ளதென்ற செய்தி சனுபாவின் காதில் இடியாக விழுந்தது.
கெமி உயிர்வாழ வேண்டுமானால் பாரியதொரு சத்திரசிகிச்சை செய்ய  வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமையில் வாழும் வாடகைத் தாயால் அதற்குரிய பணத்தைத் திரட்டுவது முடியாத காரியம்.
எனினும் கெமியின் அவுஸ்திரேலிய தாய் தந்தை கைவிட்டபோதிலும், பொதுமக்கள் கைவிடவில்லை.
குழந்தையின் சிகிச்சைக்காக இணையத்தின் மூலம் பிரச்சாரமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்மூலம் 60,000 டொலர்களை திரட்டிக் கொடுத்துள்ளார்கள்.

மற்றைய செய்திகள்

0 comments:

கருத்துரையிடுக