வீடியோ வெளியானதால் பரபரப்பு!
ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்.
அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர். ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.









0 comments:
கருத்துரையிடுக