பிரபல நடிகர் ஜாக்கி சான் தனது மகன் கைதானது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜாக்கி ஜானின் மகன் நடிகர் ஜெய்சி சான் (31), தைவான் சினிமா நடிகர் கெய் கோ (23) ஆகியோர் போதை பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஜெய்சி சான் வீட்டில் இருந்து 100 கிராம் போதைப்பொருள் கைப்பற்றபட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜாக்கி சான் தனது வலைதளத்தில், இந்த பிரச்சினை தொடர்பாக, நான் கோபமாகவும் அதிர்ச்சிகரமாகவும் உணர்கிறேன்.
நான் பிரபலமானவன் என்ற அடிப்படையில் இதற்கு நான் மிகவும் வெட்கப்படும் வேளையில், ஒரு தந்தை என்ற அடிப்படையில் எனது இதயம் உடைந்து போய் உள்ளேன்.
இதனால் இந்த சமூகத்திடமும், பொதுமக்களிடமும் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.
அனைத்து இளைஞர்களும் ஜெய்சியை பார்த்து போதைப்பொருள் தீங்கானது என்ற பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், தவறு செய்யும் போது அதற்குரிய விளைவுகளை ஏற்று கொள்ள வேண்டும்,தந்தை என்ற நிலையில் வருபவைகளை உன்னுடன் சேர்ந்து எதிர்கொள்ள போகிறேன் என்று ஜெய்சிக்கு கூறுவதாக தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக