siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 15 மார்ச், 2015

சிறையில் அதிபருக்கு எதிராக போராடியவர் தற்கொலை!!!

வெனிசுலாவைச் சேர்ந்தவர் ரொடால்போ கான்ஜலெஸ் (வயது 64). விமானியான இவர், அரசுக்கு எதிராகவும், அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராகவும் மக்களை போராட்டம் நடத்த தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கான்ஜலெஸ்சை கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர் திடீரென சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அந்நாட்டு உள்துறை மந்திரி கஸ்டவோ கான்ஜலெஸ் உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக மாநில அரசு வக்கீல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கான்ஜலெஸ்சை ஏற்கனவே இருந்த
 சிறையில் இருந்து, அதிக வன்முறை சம்பவம் நிகழும், போதைப்பழக்கம் உள்ள பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைக்கு மாற்ற இருந்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கான்ஜலெஸ்சின் மகள் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை அரசு மறுத்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 comments:

கருத்துரையிடுக