siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 9 மார்ச், 2015

பயணத்தை தொடங்கியது சூரியசக்தியால் இயங்கும் விமானம்

சூரியசக்தியால் இயங்கும் 'இம்பல்ஸ் 2' விமானம் அபுதாபியில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது. விமானம் அடுத்து உலகம் முழுவதும் சுற்றி வருகிறது.அடுத்த 5 மாதங்களுக்கு விமானம் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்கிறது. விமானம் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களை கடக்கிறது. ஒருவிமானி மட்டும் இருந்து ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ள விமானத்தின் கட்டுப்பாட்டை, ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் கொண்டிருந்தார். சுவிஸ் நாட்டின் பெர்னார்ட் பிக்கார்டை
 தொடர்ந்து ஆண்ட்ரே போர்ஷ்பெக்கும், சூரியசக்தியால் இயங்கும் விமானத்தில் விமானியாக பணியாற்ற உள்ளார். இந்த விமானம் உலகின் பல்வேறு  பகுதிகளில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் மற்றும் ஓய்வு காரணமாக விமானம் தரையிறக்கப்பட உள்ளது. தொழில்நுட்பம் தொடர்பாக  விமானம் பிரசாரமும் மேற்கொள்ள உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் பி.பி.சி. செய்திநிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நாங்கள் மிகவும் சிறப்பான விமானத்தை கொண்டுள்ளோம் என்று நம்புகிறோம், விமானம் எங்களை பெரிய கடல்கள் முழுவதும் சுற்றிவரும் திறன் கொண்டுள்ளது. நாங்கள் 5 நாட்கள் இதில் தொடர்ச்சியாக பயணம் செய்யலாம். இது மிகவும் சவாலானது. சீனா சென்று காலுன்றுவதற்கு பயிற்சி மற்றும் தயாராக எங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்கள் உள்ளது. என்று கூறினார். 
எரிபொருள் இல்லாமல் முழுக்க முழுக்க சூரியசக்தியால் மட்டுமே இயங்கும் 'இம்பல்ஸ் 2' என்ற சோலார் விமானத்தை பெர்னார்ட் பிக்கார்டு, ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இரண்டு பைலட்டுகள் வடிவமைத்துள்ளனர். உலகிலேயே முதன்முறையாக  ஸ்விட்சர்லாந்து நாட்டில் வெற்றிகரமாக விமானத்தின் சோதனை ஓட்டம் 
கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. ஸ்விட்சர்லாந்தின் மேற்கே உள்ள பாயிரைன் மிலிட்டரி ஏர்போர்ட்டில் இருந்து பறக்க துவங்கிய இந்த விமானம் இரண்டு மணி நேரம், 17 நிமிடங்கள் வரை பறந்து 2400 அடி உயரம் வரை சென்றது.
சூரியசக்தி விமானத்துக்கு எரிபொருள் தேவையில்லை. காற்றை மாசுபடுத்தும் புகையை வெளியிடாது. இரவிலும், பகலிலும் பறக்கும் திறனுடையது. சுமார் 72 மீட்டர் அகலம் கொண்ட இந்த விமானத்தின் இறக்கை ஒரு பெரிய ஜம்போ விமானத்தின் இறக்கையை விட பெரியது. மற்ற விமானங்களை காட்டிலும் மிகக்குறைந்த எடை கொண்ட இந்த விமானத்தின் எடை வெறும் 2.3 டன் மட்டுமே. எரிபொருளுக்கு மாற்றாக சூரியசக்தியில் இயங்கும் இந்த விமானத்தில் 17  ஆயிரத்திற்கும்
 மேற்பட்ட சோலார் பேட்டரிகள் உள்ளன. இந்த சோலார் பேட்டரிகள் கிரகித்துக் கொள்ளும் சூரியசக்தியே விமானத்திற்கு பறக்கும் உந்துசக்தியை  கொடுக்கிறது. விமானம் முதற்கட்டமாக, இந்தியா, சீனா, பசிபிக் கடல், அமெரிக்கா மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேலே பறக்க திட்டமிட்டுள்ளது. 
இந்த விமானம் பயணிகள் விமானத்திற்கு மாற்று அல்ல என்றும், ஆனால், மனிதர்கள் இயற்கை தரும் சக்திகளை பயன்படுத்தி இதுபோலவும் செய்ய முடியும்  என்று எடுத்துக்காட்டுவதற்கே இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விமானிகள் ஏற்கனவே தெரித்து இருந்தனர்.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக