siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 28 ஜூலை, 2015

திருமண வீட்டில் துப்பாக்கி சூடு; 21 பேர் பலி 10 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதத்தலைவர் மகன் திருமணம்
ஆப்கானிஸ்தானில் பக்லான் மாகாணம் தலீபான் தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்த பகுதி ஆகும். இங்கு அடிக்கடி தீவிரவாத தாக்குதல் நடப்பதுபோல் முன்விரோதம் காரணமாக மோதல்கள் நடைபெறுவதும் உண்டு. வன்முறையில் ஈடுபடுவோர் தீவிரவாதிகள் என்ற பெயரைப் பயன்படுத்தி தங்களது விரோதிகள் மீது தாக்குதல் நடத்துவதும் வழக்கம்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பக்லான் மாகாணத்தில் உள்ள அந்தராப் மாவட்டத்தில் மதத்தலைவர் ஒருவரது மகன் திருமணம் அவருடைய வீட்டில் நடந்தது. இதற்காக 400-க்கும் அதிகமான உறவினர்கள் அங்கு வந்திருந்தனர்.
துப்பாக்கி சூடு
அப்போது, இரு தரப்பினருக்கு இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்றனர். 
இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் அதிகாரியின் உறவினர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொண்டனர். இதனால் திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
21 பேர் பலி
எனினும், இரு தரப்பினரின் துப்பாக்கி சூட்டில் திருமணத்துக்கு வந்திருந்த 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். 
அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தேடுதல் வேட்டை
இது குறித்து அந்தராப் மாவட்ட போலீஸ் அதிகாரி குலிஸ்தான் கியூசானி கூறும்போது, ‘‘துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் 14 முதல் 60 வயது கொண்டவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களின் உடல்களை சேகரித்தபோது, யாரிடம் துப்பாக்கி இருந்தது, யாரிடம் இல்லை
 என்பதை எங்களால் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் உடல்கள் கிடந்த இடத்தில் எந்த ஆயுதங்களையும் காணவில்லை’’ என்று தெரிவித்தார்.
திருமண வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதனால் அவர்களை தேடும்பணியை போலீசார் தீவிரமாக முடுக்கி விட்டு உள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக