கரீபியன் கடல் நாடான டிரினிடாட்-டொபாகோவின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயின். அங்குள்ள சிறையில் பல்வேறு கிரிமினல் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த 24-ந் தேதி அதிபயங்கர குற்றவாளிகள் 3 பேர் சிறையை உடைத்து, சிறைக்காவலர்களை துப்பாக்கியால் சுட்டு தப்பித்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு சிறை காவலர் உயிரிழந்தார். சிறை காவலர்கள்
திருப்பி சுட்டதில் தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் குண்டு பாய்ந்து
உயிரிழந்தார். 2 பேர் தப்பி விட்டனர்.அவர்கள் ஆபத்தானவர்கள் என்றும், பயங்கர ஆயுதங்களுடன் தப்பினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த கைதிகள் வேறெங்கும் தப்பி
விடாதபடிக்கு அந்த நாட்டில் உள்ள விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் உச்சக்கட்ட உஷார் நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் சிலர் பிடித்து விசாரிக்கப்படுவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சம்பவம் தொடர்பாக பிரதமர் கம்லா பெர்சாத் விடுத்துள்ள அறிக்கையில், “உங்கள் அரசு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன” என கூறி உள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக