சிங்கப்பூரில் ஆற்றில் தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியப்பெண், அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது.
சிங்கப்பூர் நாட்டின் வம்போவா ஆற்றில் கடந்த 2013-ம் ஆண்டு தலையில்லாத நிலையில் இந்தியாவை சேர்ந்த, 33 வயது பெண்ணின் சடலம் காணப்பட்டது. தற்போது பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார் என்று கரோனர்ஸ் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
கணவன் – மனைவி இடையே நடைபெற்ற சண்டையின்போது, ஜாஸ்விந்தர் கவுரின் தலையில் கட்டிங் பிளேடை கொண்டு அவரது கணவர் ஹர்விந்தர் சிங் அடித்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஹர்விந்தர் சிங் தற்போது இண்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.
2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி ஜாஸ்விந்தர் கவுரை அவரது கணவர் கொலை செய்து உள்ளார் என்று கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி காலையில் ஆற்றில் மிதந்தவண்ணம் ஜாஸ்விந்தர் கவுரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜாஸ்விந்தர் சிங், கணவரிடம் இருந்து தொடர்ந்து விலகியே இருந்து உள்ளார். இதனையடுத்தே இருவர் இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. அப்போது ஹர்விந்தர் சிங் அடித்ததில், ஜாஸ்விந்தர் கவுர் மயங்கிவிட்டார், பின்னர் ஹர்விந்தர் சிங் தனது நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடத்த சம்பவத்தை தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்தே சடலத்தை மறைக்க அவர் முயற்சி செய்து உள்ளார் என்று சிங்கப்பூர் செய்தி நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
கவுரின் சடலத்தை வெளியே கொண்டு செல்ல உதவிசெய்த இந்தியர் குருஷரன் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தை அடுத்து ஹர்விந்தர் மலேசியா சென்று
பின்னர் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அவரை பிடிக்கமுடியாமல் தொடந்து தலைமறைவாக உள்ளது. இருப்பினும் கவுர் மரணத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியாத நிலையே நீடிக்கிறது.
இதுவரையில் ஜாஸ்விந்தர் கவுரின் வெட்டப்பட்ட கைகள் மற்றும் தலை இதுவரையில் கண்டுபிடிக்கப்படாதது, தொடர்ந்து மர்ம நீடித்துக் கொண்டே இருக்கிறது.
0 comments:
கருத்துரையிடுக