ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என்ற நம்பிக்கை வலுத்து உள்ளது, இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது.
அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டு தாண்டிவிட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.
மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும்பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
அனேகமாக மாயமான விமானத்தை ஒரு வருடத்திற்கு மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் ரீயூனியன் கடற்பகுதியில்
கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என்ற நம்பிக்கை வலுத்து உள்ளது, இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில்உள்ள பிரஞ்சு நாட்டின் தீவான ரீயூனியன் கடற்பகுதியில் விமானத்தின் உதிரிபாகங்கள் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ரீயூனியன் கடற்பகுதியில் கரை ஒதுங்கிஉள்ள சிதைவுப் பொருட்களானது மாயமான மலேசிய விமானத்தில் இருந்துவந்து இருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் கருதுகின்றனர். இதுவரையில் வேறுஎந்தஒரு போயிங் 777 ரக விமானம் மாயமாகவில்லை.
எனவே கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சிதைவுகளானது மாயமான மலேசிய விமானத்தில் இருந்தே வந்து இருக்க வாய்ப்பு உள்ளது.
சிதைவுகளை ஆய்வு செய்ய பிரஞ்சு விமானப் போக்குவரத்து
வல்லுநர்களுக்காக அமெரிக்க அதிகாரிகள் காத்திருக்கின்றனர், சிதைவில் கண்டு பிடிக்கப்பட்டுஉள்ள சிரியல் நம்பர் விமானத்து ஒத்து போனால் அது மாயமான விமானத்தின் சிதைவுகளே, என்று அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.
ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சிதைவு பொருட்கள் அனைத்தும், விமானத்தின் உதிரிபாகங்கள் போன்று உள்ளது.
விமானத்தின் பின்பகுதியில் இருக்கும் பொருட்களை ஒத்துப்போகின்றது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இது விமானத்தின் சிதைவு பாகங்கள் தான் என்பதை உறுதிசெய்யும் விதமாக உள்ளது.
இதற்கிடையே விமானத்தின் சிதைவு பாகங்கள்தானா என்பதை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். விமான போக்குவரத்து துறை வல்லூநர்களும் ஆய்வில் இருங்கி உள்ளனர். இதற்கிடையே ஆய்வு நடத்துவதற்கு ஒன்றும் இல்லை இதுவிமானத்தின் சிதைவு பாகம்தான் என்ற ஒரதரப்பு தகவலும் வெளியாகி உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக