siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 3 நவம்பர், 2015

ரொக்கெட் தொழற்சாலைகளின் புகைப்படங்கள் வெளியாது?.

கிழக்கு ஜைநீரியாவில் ரொக்கெட் செய்யும் தொழிற்சாலைகள் குறித்த வெளிப்படையான ஒளிப்படங்களை இஸ்லாமியப் கிளர்ச்சிக் குழுவான பொகோ ஹராம் வெளியிட்டுள்ளது.இந்த புகைப்படங்களை அவர்கள் வாட்ஸ் அப் மூலம் கெமரூன் பகுதியின் தொலைப்பேசி இலக்கம் 
ஒன்றின் மூலம் பிபிசி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அத்துடன், இவ் ஒளிப்படங்கள் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபட்ட வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளது.
பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் கடந்த காலங்களில் ரொக்கெட் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி வந்தனர்.இவர்களுக்கு இந்த ஆயுதங்கள் எவ்வாறு கிடைக்கின்றன என நைஜீரியர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையிலேயே இந்த ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை கிளர்ச்சிக் குழுவில் உள்ள அங்கத்தவர்கள், ஆயுதங்களை தயாரிக்கும் அளவிற்கு தொழில்நுட்ப அறிவை கொண்டுள்ளார்கள் 
என்பதை வெளிப்படுத்தும்
 வகையில் அமைந்துள்ளது.இந்த ஒளிப்படங்கள் போர்னா மாநிலத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றிலேயே எடுக்கப்பட்டுள்ளதாக
 நம்பப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக